Social Icons

Saturday 22 March 2014

நான்கு இமாம்களும் அகீதா கொள்கையும்

இமாம் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாபிஈ (ரஹ்).
இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். யார் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டும் அல்லது அல்லாஹ்வுடைய பெயர்களில் ஒரு பெயரைக் கொண்டும் சத்தியம் செய்து அதை முறித்தால் அவர் பரிகாரம் செய்ய வேண்டும். யார் அல்லாஹ் அல்லாஹ் அல்லாதவைக் கொண்டும் உதாரணமாக கஃபாவின் மீது ஆணையாக, என்னுடைய தந்தை மீது ஆணையாக, என்னுடைய வாழ்நாள் மீது சத்தியமாக என்று சொல்­ சத்தியத்தை முறித்தால் அவர் மீது பரிகாரம் இல்லை. (காரணம் அது சத்தியமாக ஆகாது) அல்லாஹ் அல்லாஹ்தவை மீது சத்தியம் செய்வது தடை செய்யப்பட்டதாகும். நபி ஸல் அவர்களும் இதை தடை செய்துள்ளார்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு சத்தியம் செய்வதற்கு காரணம் சொன்ன இமாம் அவர்கள் அல்லாஹ்வுடைய பெயர்கள் படைக்கப்பட்டதல்ல என்று சொன்னார்கள்.
ஆதாரம் மனாகிபுஸ் ஷாபிஈ பாகம் 1 பக்கம் 405. ஆதாபுஷ் ஷாபிஈ இப்னு அபீஹாதம் பக்கம் 193. சுனன் பைஹகி அல் குப்ரா பாகம் 10 பக்கம் 28.
இன்னும் சில கிதாபுகள்.
அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை முஹம்மத் ஸல் அவர்கள் அல்லாஹ்வுடைய துதராக இருக்கிறார்கள் அல்லாஹ் வானத்தில் உள்ள அர்ஷின் மீது இருக்கிறான் தான் நாடிய விதம் படைப்பினங்களின் பக்கம் நெருங்கிவருகிறான் இன்னும் தான் நாடியவிதத்தில் துன்யாவுடைய வானத்தின் பக்கம் வருகிறான் என்பது  நான் எந்த சுன்னத்தை பின்பற்றுகிறேனோ அந்த சுன்னத்தின் சொல்லும் இன்னும் அஹ்லுல் ஹதீஸ் ஹதீஸ் துரை அறிஞர்களின் சொல்லும் இன்னும் சுப்யான் மா­க் ஆகியோரின் சொல்லும் இதுதான்.
ஆதாரம் : இஸ்பாது ஸிபதில் உலூவ் பக்கம் 124. அல் உலூவ் தஹபி பக்கம் 120.
மேலும் இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். குர்ஆனில் வந்திருப்பதை போன்று நாமும் அல்லாஹ்வின் பண்புகளை உறுதிப்படுத்துகிறோம். இன்னும் சுன்னத்தில் வந்திருக்கின்ற அல்லாஹ்வின் பண்புகளையும் உறுதிப்படுத்திகிறோம். இன்னும் அல்லாஹ் தனக்கு இல்லை என்று சொன்ன பண்புகளை நாமும் மறுக்கிறோம்.
ஆதாரம் : அஸ்ஸியரு தஹபி பாகம் 20 பக்கம் 341.
அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் இதில் ஒரு கூட்டம் அல்லாஹ்வை பார்ப்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள் இன்னும் அல்லாஹ்வை பார்ப்பதை விட்டும் தடுக்கப்படமாட்டார்கள் அவனை பார்ப்பதற்கும் முண்டியடிக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிடுகிறான் என்று இமாம் ஷாபிஈ ரஹ் சொன்னதாக ரபீ பின் சுலைமான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆதாரம் : அல் இன்திகா பக்கம் 79.
யார் குர்ஆன் படைக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறானோ அவன் காபிர் என்று இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் குறிப்பிட்டதாக ரபீ பின் சுலைமான் என்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆதாரம் : ஷரஹ் உஸீ­ இஃதிகாதி அஹ்லுஸ்ஸீன்னத் வல் ஜமாத் பாகம் 1 பக்கம் 252.
இமாம் ஷாபிஈ ரஹ் அவர்களிடம் அல்லாஹ்வின் பண்புகளை பெயர்களையும் எதை நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை பற்றி கேட்கப்பட்டடது. அதற்கு இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் அல்லாஹ்விற்கு பண்புகளும் பெயர்களும் உள்ளன. அவனுடைய பண்புகளையும் பெயர்களையும் அவனுடைய வேதமும் அவனது தூதரும் அறிவித்திருக்கிறார்கள்….
இன்னும் அல்லாஹ் தனக்கு இரண்டு கைகள் இருப்பதாக சொல்கிறான். அவனுடைய இரண்டு கைகளும் விரித்தி வைக்கப்பட்டுள்ளன. மாயிதா 64. அவனுக்கு வலது கை உள்ளன. வானங்கள் கியாம நாளில் அவனுடைய வலது கையில் சுருட்டப்பட்டுவிடும் ஸீமர் 67. இன்னும் அவனுக்கு முகம் இருக்கின்றது. அவனுடைய முகத்தை தவிர அனைத்தும் அழிந்துவிடும். கஸஸ் 88. கண்ணியமும் மகத்துவமும் மிக்க உன்னுடைய இரட்சகனின் முகத்தை தவிர மற்றவை அழிந்து விடும் ரஹ்மான் 27. அவனுக்கு கால்கள் உள்ளன நரகத்தில் தன்னுடைய காலை வைக்கின்ற வரை (இன்னும் இருக்கின்றதா என்று நரகம் கேட்டுக் கொண்டே இருக்கும்)அல்லாஹ் தன்னுடைய பாதையில் கொள்ளப்பட்ட பார்த்து சிரிக்கிறான் என்றும் அவன் இரவில் முதல் இரவில் வருகிறான் என்பதும் இன்னும் தஜ்ஜால் ஒற்றைக் கண் உள்ளவன் ஆனால் உன்னுடைய இறைவன் ஒற்றைக் கண் அல்லன் என்றும்.
இன்னும் முஃமின்கள் தன்னுடைய இறைவனை கியாம நாளில் புறக் கண்ணால் முழு இரவு சந்திரனை பார்ப்பதை போன்று பார்ப்பார்கள் என்றும் இன்னும் அவனுக்கு விரல்கள் உள்ளன ரஹ்மானுடைய இரண்டு விரல்களுக்கு மத்தியில் அடியார்களின் உள்ளங்கள் உள்ளன என்றும் அல்லாஹ்வும் அவனுடைய துதரும் அறிவித்திருக்கிறார்கள். இதை சிந்திப்பதின் மூலம் விளங்கி கொள்ள முடியாததாகும். செய்திகள் கிடைத்த பிறகு இதையும் அறியாமையினால் மறுக்கவும் முடியாது என்று இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தம்மு தஃவீல் இப்னு குதாமா பக்கம் 124. தபகாத் இப்னு அபீயஃலா பாகம் 1 பக்கம் 283. அஸ்ஸியரு தஹபி பாகம் 10 பக்கம் 79.
                                                                                                                   -எஸ். யூசுப் பைஜி.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்