Social Icons

Monday 23 June 2014

பைஅத், முரீது (தீட்சை)


மனிதனது அறிவை மழுங்கச் செய்யும் எந்தக்காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவேஅனுமதி இல்லைபைஅத், முரீது என்பதுதான் மனிதனின் அறிவை மழுங்கச்செய்வதில் முதடத்தில் உள்ளது எனலாம்.இதை விரிவாகப் பார்ப்போம்.
'ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம் பைஅத்(தீட்சைவாங்கியவர்களுடன் உள்ளத்தால்தொடர்பு வைத்திருக்கிறார்; முரீதின் (சீடரின்)உள்ளத்தில் ஊடுருவி போதனைகளைப்பதியச் செய்கிறார்'என்றெல்லாம்நம்பப்படுகிறதுஇந்த நம்பிக்கை இஸ்லாமியஅடிப்படையில் சரியானது தானா? 'எந்த ஒருமனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தின் மீதும்ஆதிக்கம் செலுத்த முடியாது' என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனேஎன் உள்ளத்தை உனதுமார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம்(ஸல்அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 3511
'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையேஉள்ளனஅவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப்புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 4798
'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும்எந்தப் பங்குமில்லை'என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தம் மனைவியர் விஷயத்தில் மிகவும்நேர்மையுடன் நடந்து கொண்டார்கள்அவர்களுக்கிடையே எந்தப்பாரபட்சமும் காட்டியது இல்லைஆனாலும் தம் மனைவியரில் ஆயிஷா(ரலி)யை மட்டும் மற்றவர்களை விட அதிகம் நேசித்தார்கள்இவ்வாறுஒருவர் மீது நேசம் வைப்பது மனிதனின் முயற்சியால் நடப்பது அல்ல.முயற்சியையும் மீறி நடப்பதாகும்.
இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் குறிப்பிடும் போது
'இறைவாஎனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக நடந்துகொள்கிறேன்எனது சக்திக்கு மீறிய (சிலர் மீது அதிக அன்பு வைக்கும்)காரியங்களில் என்னைக் குற்றவாளியாக்காதே!'என்றுகுறிப்பிடுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் :திர்மிதீ 1059, அபூதாவூத் 1822, நஸயீ 3883 இப்னுமாஜா 1961, அஹ்மத் 23959
தமது உள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது அல்லாஹ்வின்தூதருக்கே இயலவில்லை என்றால், அடுத்தவர் உள்ளங்களில் ஷெய்கு(குருஎப்படி ஆட்சி செலுத்த முடியும்?
மிகவும் அக்கறையுடனும், ஆர்வத்துடனும், கலப்பற்ற தூயஎண்ணத்துடனும் தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் போதித்தும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லைஅவரதுஉள்ளத்தை ஊடுருவி போதனையைப் பதியச் செய்ய இயலவில்லை.
இது பற்றி இறைவன் கூறும் போது
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்தமுடியாதுமாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழிகாட்டுகிறான்அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.அல்குர்ஆன் 28:56
என்ற வசனத்தை அருளினான்.
எத்தனையோ நபிமார்கள் தங்கள்மனைவியருக்கும், மக்களுக்கும், பெற்றோருக்கும் செய்த போதனைகள்பயனளிக்கவில்லை.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது.விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனேஎங்களுடன் ஏறிக்கொள்! (ஏக இறைவனைமறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ்கூறினார். 'ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத்தண்ணீரிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'அல்லாஹ் அருள்புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிருந்து காப்பாற்றுபவன்எவனும் இன்று இல்லை' என்று அவர் கூறினார்அவ்விருவருக்கிடையேஅலை குறுக்கிட்டதுஅவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான்.'பூமியேஉனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்வானமே நீநிறுத்து!' என்று (இறைவனால்கூறப்பட்டதுதண்ணீர் வற்றியதுகாரியம்முடிக்கப்பட்டதுஅந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. 'அநீதிஇழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்தூரமானோர்' எனவும்கூறப்பட்டதுநூஹ், தம் இறைவனை அழைத்தார். 'என் மகன் என்குடும்பத்தைச் சேர்ந்தவன்;உனது வாக்குறுதியும் உண்மையே; நீயே தீர்ப்புவழங்குவோரில் மேலானவன்' என்றார். 'நூஹேஅவன் உன்குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; இது நல்ல செயல் அல்ல; உமக்குஅறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்; அறியாதவராக நீர்இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்' என்று அவன்கூறினான். 'இறைவாஎனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம்கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன்; நீஎன்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகிவிடுவேன்' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 11: 42-48
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை)மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான்.அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர்.அவர்களுக்குத் துரோகம் செய்தனர்எனவே அவ்விருவரையும்அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. 'நரகில்நுழைவோருடன் சேர்ந்து இருவரும் நுழையுங்கள்!' என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)
இவையெல்லாம் நமக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?
'ஒருவர் எவ்வளவு இறையச்சம் உடையவர் ஆனாலும், தூய்மையானஎண்ணம் கொண்டவரானாலும், பழுத்த பழமாக இருந்தாலும் அவர் தனதுபோதனைகளை எந்த உள்ளங்களிலும் சேர்ப்பிக்க முடியாது' என்பது தான்இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.
இதற்கு மாற்றமாக பைஅத், முரீது என்பது அமைந்துள்ளது.
எடுத்துக் காட்டாக, முரீது வியாபாரத்தில் நேர்மையான வியாபாரிகள்என்று நம்பப்படும் சிஷ்திய்யா தரீக்காவை எடுத்துக் கொள்வோம்.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மவ்லவிகள் பலரும் இந்ததரீக்காவில் முரீது வாங்கியுள்ளனர்.
ஹுஸைன் அஹ்மத் மதனீ, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்றபெரியார்களெல்லாம் இதன் கலீஃபாக்களாக இருந்ததாகச்சொல்கிறார்கள்.
தப்லீக் தஃலீம் புத்தகம் எழுதிய முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் இந்ததரீக்காவின் வரலாறு பற்றி உருதுவில் எழுதிய நூலை ஆரணியைச்சேர்ந்த கமாலுத்தீன் அவர்கள் (இவர் தமிழகத்தில் இந்த தரீக்காவின்கலீஃபா அதாவது ஏஜெண்ட்) 'சிஷ்திய்யா ஷைகு வரலாறு' என்ற பெயரில்தமிழாக்கம் செய்துள்ளார்.
இவருக்கு நிறைய மவ்லவிகள் இன்றளவும் முரீதுகளாக உள்ளனர்அந்தநூலில் இடம் பெறும் சில சம்பவங்களையே இங்கே நாம் எடுத்துக்காட்டாக கூறப் போகிறோம்.
மஷாயிகுமார்கள் (பெரியார்கள்தங்களிடமுள்ள குணாதிசயங்களைப்பிறரில் பரவச் செய்கிறார்கள்அதற்கு நடைமுறையில் தவஜ்ஜுஹேஇத்திஹாதீ' என்று சொல்லப்படுகின்றது.
(மேற்படி நூல் பக்கம் 10)
இந்த தவஜ்ஜுஹே இத்திஹாதீ' சம்பந்தமாக ஹஜ்ரத் காஜாபாக்கிபில்லாஹ் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்' அவர்களின்சம்பவம் பிரபல்யமானதாகும்அதை ஷைகு அப்துல் அஸீஸ் (ரஹ்)அவர்கள் எழுதியுள்ளார்கள்ஒரு முறை ஹஜ்ரத் அவர்களுடையவீட்டிற்கு விருந்தனர் பலர் வந்து விட்டனர்விருந்தினரை உபசரிக்கவீட்டில் எதுவுமில்லைகவலையுடன் ஹஜ்ரத் அவர்கள் வெளியேவந்தார்கள்அருகே ரொட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார்அவர் ஹஜ்ரத்வீட்டிற்கு விருந்தினர் வந்ததைப் பார்த்து விட்டு நல்ல உணவுப்பொருட்களைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு ஹஜ்ரத்திடம்வந்தார்ஹஜ்ரத் அவர்கள் அம்மனிதரை நோக்கி மகிழ்ச்சி மேலீட்டால், 'உனக்கு என்ன வேண்டுமோ கேள்!' என்றார்கள்அதற்குஅம்மனிதர் 'உங்களைப் போன்றே என்னையும் ஆக்கிவிடுங்கள்!' என்றார்ஹஜ்ரத் அவர்கள், நீ சமாளிக்கமாட்டாய்'என்றார்கள்எனினும் அம்மனிதர் பல முறை கெஞ்சி வேண்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்பல தடவை மறுத்தும் அவர் கேட்காததால்வேறு வழியின்றி ஹஜ்ரத் அவர்கள் அவரை வேறு அறைக்கு அழைத்துச்சென்றார்கள்அங்கே தவஜ்ஜுஹே இத்திஹாதீ' செய்தார்கள்.அறையிலிருந்து வெளியே வந்த போது இருவரின் முகமும் ஒரே மாதிரித்தோற்றமளித்ததுஹஜ்ரத் காஜா சாஹிப் உணர்வோடு இருந்தார்கள்.அம்மனிதரோ உணர்வின்றி இருந்தார்இது தான் வித்தியாசம்அதேஉணர்வற்ற நிலையில் மூன்று நாட்கள் இருந்து பின்னர் இறந்து விட்டார்.
(அதே நூல் பக்கம்: 11, 12)
இப்படியெல்லாம் மூளைச் சலவை செய்யும் மடமைக்கதைகளுக்கும் 'சுப்ஹானல்லாஹ்'சொல்லக் கூடியவர்கள்இருக்கிறார்கள்.
மனிதனை முட்டாளாக்கி, அல்லாஹ்வின் தூதரை விடவும் தன்னைஉயர்த்திக் கொள்ள முற்படும் இந்தப் பித்தலாட்டக்காரர்கள்ஷெய்குகளாம்பக்குவப்பட்டவர்களாம்!
மேலே நாம் காட்டிய சான்றுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்!இவர்கள் இஸ்லாத்திற்கு எவ்வளவு பகிரங்கமான எதிரிகளாக உள்ளனர்என்பதை அறிவீர்கள்.
கற்பனை உலகில் தங்கள் முரீதுகளை மிதக்க விடுவதற்காக இவர்கள்கட்டியுள்ள கதைகள் எண்ணிலடங்கா.
'அப்துல் வாஹித் சார்பாக நதியே நீ காய்ந்து விடு' என்று நதியிடம்அப்துல் வாஹித் தன் முரீதுகளை சொல்லச் சொன்னார்களாம்.அப்படியே நடந்ததாம்.
(அதே நூல் பக்கம் : 143)
ஹஜ்ரத் அவர்களிடம் பக்கீர்கள் கூட்டம் ஒன்று வந்ததாம்ஹஜ்ரத் துஆசெய்தததும் காசு மழை பொழிந்ததாம்அதற்கு அல்வா வாங்கிச்சாப்பிட்டார்களாம்.
(அதே நூல் பக்கம் 143)
நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கொருமுறை நோன்பு திறப்பதுஇவர்களின் வழக்கமாக இருந்ததுஅதுவும் புல் பூண்டுகளைக் கொண்டுநோன்பு திறப்பார்கள்.
(அதே நூல் பக்கம் 156)
இப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தகர்த்து தரை மட்டமாக்கும்சம்பவங்கள் ஏராளம்தன்னைப் போன்ற ஒரு மனிதரை இந்த அளவுக்குஉயர்த்திட இவர்கள் எங்கே கற்றார்கள்?அல்லாஹ்விடமிருந்தா? அல்லாஹ்வின் தூதரிடமிருந்தா? நிச்சயமாகஇல்லை.
பண்டாரங்கள், பரதேசிகள் ஆகியோரிடமிருந்து இதைக் கற்றுஇஸ்லாத்தில் திணித்து விட்டனர்பிறர், இஸ்லாத்திற்கு வருவதற்குதடைக் கற்களை ஏற்படுத்தி விட்டனர்இவர்கள் கப்ரு வணக்கத்தைஏற்படுத்தியவர்களை விட மோசமானவர்கள்அல்லது அதற்குச் சற்றும்குறையாதவர்கள்.
மிகவும் உயர்வானது என மதிக்கப்படும் தரீக்காவின் நிலை இதுஇதேதரீக்காவில் இன்னும் நவீன கோட்பாடுகள் பல உள்ளன.
காலில் விழச் சொல்லும் ஷெய்குகள்
இசையில் மயங்கும் ஷெய்குகள்
தொழுகை போன்ற வணக்கங்கள் தேவையில்லை எனக் கூறும்ஷெய்குகள்
என்றெல்லாம் பல பித்தலாட்டக்காரர்கள் உள்ளனர்.
ஒழுங்கான இஸ்லாமிய ஆட்சி நடந்தால் இவர்களெல்லாம் மரணதண்டனைக்கு உரியவர்கள்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் அனைத்து தரப்பினாலும்ஏற்கப்பட்ட ஹிஜ்ரி 971ல் மரணமடைந்த இமாம் குர்துபீ (முஹம்மத் பின்அஹ்மத் அல் அன்ஸாரிஅவர்கள் தமது 'அல் ஜாமிவுல் அஹ்காமில்குர்ஆன்' எனும் திருமறை விரிவுரை நூலில் குறிப்பிடுவதை இங்கேஎடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
சூஃபியாக்களின் கொள்கை முட்டாள் தனமானதும், வழிகேடும் ஆகும்.இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், அவன் தூதருடையநடைமுறையையும் தவிர வேறில்லைநடனமாடுவது, இறைக் காதல்என்பதெல்லாம் ஸாமிரி என்பவன் உருவாக்கியதாகும்இஸ்லாமியஆட்சியாளர்கள், இவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்துநிறுத்துவது அவசியமாகும்அல்லாஹ்வையும், இறுதி நாளையும்நம்புகின்ற எவரும் இவர்களின் அவைக்கு வருகை தரக் கூடாது.இவர்களின் தவறுக்கு துணை நிற்கலாகாதுஇது தான் இமாம்மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபீ, இமாம் அஹ்மத் பின் ஹம்பல்மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் முடிவாகும் என அபூபக்கர் தர்தூஷிஅவர்கள் சூபியாக்கள் பற்றிய கேள்விக்கு விடையளித்தார்கள்.
(பார்க்க தாஹா அத்தியாயம் 92 வது வசனத்தின் விரிவுரை)
இந்த வழிகெட்ட சூபியாக்கள் நான்கு மத்ஹபுகளுக்கும் கூடஅப்பாற்பட்டவர்கள் என்பதற்கு குர்துபி அவர்களின் இந்தக் குறிப்புசான்றாக அமைந்துள்ளது.

காலில் விழலாமா?
ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின்கால்களைக் கழுவி,கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவதுஎன்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டுவருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமதுகால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லைஅறியாதசிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத்தடுக்காமலும் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன்அங்குள்ளவர்கள் தமதுதலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம்பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று(எனக்குள்கூறிக் கொண்டேன்நபிகள் நாயகம் (ஸல்அவர்களிடம்வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன்மக்கள் தமதுதலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன்நாங்கள் சிரம் பணிந்திடநீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன்அதற்கு நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்எனது அடக்கத்தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக்கேட்டார்கள். 'மாட்டேன்'என்று நான் கூறினேன்அதற்கு நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாதுஒரு மனிதன்இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால்கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்றுகூறினார்கள்.
அறிவிப்பவர்கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்அபூதாவூத் 1828
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும்எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியை நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.

காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான்என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக்கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்குவழக்கமாக இருந்ததுஅதையே நான் அனுமதிக்காத போது என் காலில்எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

'உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே' என்று மக்கள் கேட்கும் போதுதமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்துபணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள்.'எனதுமரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள்' என்றுவாழும் போதே எச்சரித்துச் சென்றனர்எனவே தமது கால் விழுமாறுமக்களுக்கு வழி காட்டுவோர் கயவர்களாவர்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்